கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
0 Comments