எங்களது 3 வயது பேத்தி காலையில் கண்ணைத் திறக்காமல் அழுதுக்கொண்டே எழுந்தாள்.
தூக்கக் கலக்கம் போலும் என்று எண்ணி சமாதானம் செய்து பார்த்தோம் ஆனால் அழுகிறாளே தவிர கண்ணைத் திறக்க வில்லை .
ஈரத் துணியால் கண்ணைத் துடைத்தோம், பாத்ரூம் எடுத்துச் சென்று முகம் முழுவதும் கழுவிப்
பார்த்தோம் கண்ணைத் திறக்கவில்லை.
மகளே மகளே என்று பலமாக அழைத்தும், ஐஸ் கட்டிகளை வைத்தும் பார்த்தோம்
எந்தவித பிரயோசனமும் இல்லை.
கண்ணைத்
திறந்து விடு என்று இறைவனைப் பிரார்த்தித்த வாரே குழந்தையுடன் டாக்டரிடம் ஓடினோம்.
கண் டாக்டர் காலை 10 மணிக்கு வருவார் இப்போது காலை 9 மணிதான் ஆகிறது.
அவசர உதவிக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றோம்
குழந்தை காலையில் இருந்து கண்ணை திறக்கவிலை என்று டாக்டரிடம் சொன்னதும் டாக்டர் கேட்ட முதல் கேள்வி பாப்பா செல்போன் அதிகம் பார்க்குமா? என்று.
செல்போனை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்ததால் அதிலுள்ள சூடு கண்ணை அதிகம் பாதித்துள்ளது.
கண்ணிலுள்ள குளிர்ச்சி போய் டிரையாகி விட்டது. பயப்பட வேண்டாம் என்று சொல்லி மருந்து கொடுத்துள்ளார்.
மருந்து கொடுத்த சற்று நேரத்தில் தானாகவே குழந்தையும் கண்ணைத் திறந்து விட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
செல்போனை குழந்தைகள் தொடர்ந்து அதிகம் பார்த்தால் கண்கள் பெரிதாக
பாதிக்கும்.
குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதைத் தவிருங்கள் என கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளார் டாக்டர்.
குடும்பமே அரைமணி நேரம் அல்லோலப்பட்டது.
முன் எச்சரிக்கை , இது ஒரு அனுபவம் என எடுத்துக் கொண்டு இனிமேல்
குழந்தைகளிடம் செல்போன் கொடுப்ப தில்லை என கண்டிப்பாக இருப்போம்.
0 Comments