Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



எரிபொருள் விலை குறைவடைந்தால் பஸ் கட்டணத்தை குறைப்போம் ; தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்…!


தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதில்லை. அதற்கான அவசியமும் எமக்கு கிடையாது.எரிபொருள் விலை குறைவடைந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பஸ் கட்டணத்தை குறைப்போம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரி அதிகரிப்புக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் இவ்வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். தனியார் பஸ் தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடாது, ஏனெனில் கொவிட் பெருந்தொற்று தாக்கம்,எரிபொருள் பற்றாக்குறை ஆகிய காரணிகளினால் தனியார் பஸ் தொழிற்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. தற்போது தான் நிலைமை சற்று சீரடைந்துள்ளது.

மாதம் ஒரு இலட்சத்துக்கு அதிகம் சம்பளம் பெறும் தொழில் துறையினர் தான் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள், நாட்கூலி பெறுபவர்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை, ஈடுபடவும் முடியாது, ஆகவே தனியார் பஸ் சேவை வழமை போல் இடம்பெறும்.

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைவது சாதகமாக உள்ளது,நடுத்தர மக்கள் இதனையே எதிர்பார்க்கிறார்கள். எரிபொருளின் விலை குறைவடைந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள பஸ் கட்டண திருத்தத்தின் போது பஸ்க் கட்டணத்தை இயலுமான அளவு குறைப்போம் என்றார்.

Post a Comment

0 Comments