இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில், முதலீட்டுத் தகவல்களை இலகுவாக அணுகும் வகையில் டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கும் விவசாயத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை எளிதாக்கும் நோக்கத்துடன் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அபிவிருத்திச் சட்டம் மற்றும் நெல் நிலச் சட்டத்தின் மீள்திருத்தத்தின் அவசியத்தையும் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஒவ்வொரு அரசு நிறுவனமும், துறையும் பயன்படுத்தாத அரசுக்குச் சொந்தமான நிலத்தை உடனடியாகக் கண்டறிந்து, அதற்கான தகவல்களுடன் தரவு வங்கியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நேற்று பிற்பகல் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments