Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சூடானிலிருந்து மீட்கப்பட்ட 9 பேர் தமிழகம் வந்தனர்..!



சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை மீட்டு கொண்டு வர 'ஆபரேசன் காவேரி' என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

" சூடானில் சம்பாதித்தை விட்டு விட்டு கடந்த 8 நாட்களாக நாடோடியாக திரிந்தோம் என்றும் சூடானில் நிகவும் உள்நாட்டு போரால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சூடானில் இருந்து மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி" என தமிழகம் திரும்பியவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments