சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித் தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 14 சவூதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, தென் சூடான் மற்றும் ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த 206 பேரும் செவ்வாய்க்கிழமை (2) மாலை ஜெத்தா நகரை வந்தடைந்தனர் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் மன்னரின் கப்பலான 'ரியாத்' மூலம் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் தத்தமது நாடுகளுக்கு புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் சவூதி அரேபியா காட்டிவரும் ஆர்வத்தினையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.
இவர்களை சூடானிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 102 நாடுகளைச் சேர்ந்த 5629 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 239 பேர் சவூதி பிரஜைகள் என்றும் 5390 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
0 Comments