Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு...!


இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அகற்றப்படும் என கூகுள் (Alphabet Inc) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2022 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கையாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது இரண்டு வருடங்களாக Google கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருந்தால், கணக்கு அகற்றப்பட்டு, Gmail, Docs, Drive, Meet மற்றும் Calendar, அத்துடன் YouTube மற்றும் Google உட்பட அனைத்து Google Workspace உள்ளடக்கமும் நீக்கப்படும்.

இந்தக் கொள்கை தனிப்பட்ட Google கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பாடசாலைகள், வணிகங்கள் போன்ற நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

குறித்த கணக்குகளை நீக்குவதற்கு முன்னர் நேற்று (16) முதல் அந்த மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் செயலற்ற கணக்குகளின் மீட்பு மின்னஞ்சல் முகவரிகளுக்கு பல அறிவிப்புகளை அனுப்ப கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments