Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜூனில் 2479 டெங்கு நோயாளர்கள் பதிவு...!



ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41883 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

Thanks: Daily-Ceylon

Post a Comment

0 Comments