![](https://www.dailyceylon.lk/wp-content/uploads/2023/06/fertilizer-3.jpg)
பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்கள் மூலம் நாளை முதல் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உரங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் விவசாய அமைச்சு இதனை அறிவித்திருந்தது.
இதன்படி நாளை முதல் பொலன்னறுவை மாவட்ட விவசாய சேவை நிலையங்களுக்கு உரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உர கம்பனி மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள 22,500 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலில் இருந்து உரம் இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments