Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கைக்கு நேரடி சேவையாக துருக்கி எயார்லைன்ஸ்...!



துருக்கிய எயார்லைன்ஸ் இஸ்தான்புல், துருக்கி மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான இணைப்புகளை அக்டோபர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், விமானப் பயணிகள், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து உலகின் 129 நாடுகளுக்கு குறுகிய விமான இணைப்பு நேரத்தின் மூலம் எளிதாகப் பயணிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் குளிர்காலமாக இருக்கும் என்பதால், இந்த விமான சேவையின் ஊடாக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக துருக்கிய எயார்லைன்ஸ் மாலைதீவு ஊடாக தனது விமான இணைப்புகளை பராமரித்து வருகின்றது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அந்த இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டு இலங்கையுடனான நேரடி விமான இணைப்புகள் ஆரம்பிக்கப்படும்.

Post a Comment

0 Comments