எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு லார்வா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். காலநிலைக்கு ஏற்ப டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்தாவிடின் டெங்கு கொவிட் போன்ற ஆபத்தான நோயாக மாறும் என்றும் கூறினார்.
Thanks:
Daily-Ceylon
0 Comments