தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.38 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கே உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு அல்லது குறிப்பிடத்தக்க சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீடுகளின் சுவர்கள் குலுங்கியதைக் கண்டு விழித்ததாகவும் நகர மக்கள் தெரிவித்தனர்.
2014 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஓர்க்னி என்ற தங்கச் சுரங்க நகருக்கு அருகில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
0 Comments