Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

"உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது”- ரஜினி சொன்ன குட்டிக்கதை!



ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து குட்டிக்கதை ஒன்றை சொன்னார்.

ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு 1977இல் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. அப்போது இருந்து எனக்கு பிரச்னை தான். அந்த பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். உடனே ரஜினிகாந்த் பயந்து விட்டார் என்று கூறினார்கள். நான் பயப்படுவது இரண்டே இரண்டு பேருக்கு தான் ஒன்று கடவுள் இன்னொன்று நல்ல மனிதர்கள்.


அப்போது இருந்த காலகட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார். கமல் உச்சத்தில் இருந்தார். அவர்கள் இருக்கும்போது எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று நினைத்தேன். மேலும் துறையில் வயிற்றெரிச்சல் நிறைய இருக்கும். இப்போது உள்ள 2K கிட்ஸ் நான் பட்ட கஷ்டங்கள் தெரியாது. ஏனென்றால், தற்போது இருப்பதுபோல் அப்போது சோஷியல் மீடியா இல்லை. இருந்திருந்தால் நான் பட்ட கஷ்டங்கள் தெரிந்திருக்கும.

விலங்குகளில் சேட்டையானது குரங்கு. பறவைகளில் சேட்டையானது காகம். காகம் ஒரு இடத்தில் இருக்காது அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து மிக உயர பறந்து கொண்டிருக்கும். காகம் தனது சிறகடித்து கழுகை நோக்கி பறந்து சென்று அதனை கொத்தும். ஆனால் பறந்து காகத்தை ஒன்றும் செய்யாது இன்னும் கொஞ்சம் மேலே பறந்து விடும். காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால், முடியாது கீழே விழுந்து விடும்.


எனவே, நம்மை யாராவது எதிர்த்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உடனே சமூக ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகமாக சொன்னார் இவரை பருந்தாக சொன்னார் என்று ஏதாவது எழுதுவார்கள். குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை. எனவே, நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போயிக்கிட்டே இருப்போம்” என்று பேசினார்.

ஹூக்ஹூம் பாடல் குறித்து:

மேலும் ஹூக்ஹூம் பாடல் குறித்து பேசுகையில், “உங்களுடைய திரைப்படங்களில் ரசிகர்களுக்காக பாட்டு வைத்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களை உற்சாகப்படுத்த இந்த திரைப்படத்தில் ஹூக்ஹூம் என்று ஒரு பாடல் வைத்துள்ளோம் என்று அனிருத் என்னிடம் கூறிவிட்டு, கவிஞர் சூப்பர் சுப்பு எழுதிய எழுதிய பாடலை என்னிடம் காட்டினார். பாட்டு தாறுமாறாக இருந்தது. வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தியிருந்தார்கள். அதனை எல்லாம் எடுக்க சொல்லிவிட்டேன். அதேபோல்

இந்த சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை எல்லாம் வேண்டாம் என்றேன். ரசிகர்களுக்கானது இருக்கட்டும் என்று கூறி விட்டார்கள்” என்றார்.

“நல்ல திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பாருங்கள்”

”முன்பெல்லாம் தென்னிந்திய படங்கள் என்றால் தமிழ் தான் ஆனால் தற்போது அப்படி இல்லை காலம் மாறிவிட்டது, தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் இந்தியா முழுக்க தெரிகிறது. தமிழ் திரையுலகில், நிறைய படங்கள் வந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓடினால் தான் தியேட்டர்காரர்கள் பணம் சம்பாதிக்க முடியும். தியேட்டருக்கு கூட்டம் வருகிறது.

சிறிய படங்களுக்கு தியேட்டரில் கூட்டம் வருவதில்லை், இதனால், தியேட்டருக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே ஓடிடியில் வந்துவிடுகிறது. அந்த ஹீரோபடம், இந்த ஹீரோ படம் என்று பார்க்காமல் நல்ல திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பாருங்கள். அப்போது தான் திரையுலம் நன்றாக இருக்கும்” என்றார் ரஜினிகாந்த்.

Post a Comment

0 Comments