Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நபர் ஒருவரின் கொடூர செயல் - துண்டுகளாக வெட்டப்பட்ட உடற்பகுதிகள்.

 

அதுருகிரிய, சீலாலங்கார மாவத்தை பகுதியில் நபர் ஒருவரின் கை கால்களை வாளால் தனித்தனியாக வெட்டி எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாள்

அத்துருகிரிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரத பெர்னாண்டோவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரகட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வாள் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

டுபாயில் வாழும் ஹபரகட கசுன் என்ற போதைப்பொருள் வியாபாரியின் நண்பரின் மனைவியுடன் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பு வைத்திருந்ததால், அதற்கு பழிவாங்கும் விதமாக ஹபரகட கசுன் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்

அதற்காக ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள்  மற்றும் நாற்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம முல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் கூலி வேலையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments