Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் ட்ரூடோ...!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா 18 ஆண்டு திருமண வாழ்வின் பின் தனது மனைவி சொபியாவை பிரிந்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அன்பு மற்றும் மதிப்புடன் நெருக்கமான குடும்பம் ஒன்றாக” தொடர்ந்தும் தாம் இருக்கப்போவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பிரதமர் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று 51 வயதான ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2015 இல் ட்ரூடோ பிரதமரான பின்னர் அவரும் மனைவியும் பல நிகழ்வுகளில் காணப்பட்டனர். எனினும் சமீபகாலமாக இருவரையும் ஒன்றாக பொதுநிகழ்வுகளில் காணமுடியவில்லை என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா 18 ஆண்டு திருமண வாழ்வின் பின் தனது மனைவி சொபியாவை பிரிந்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அன்பு மற்றும் மதிப்புடன் நெருக்கமான குடும்பம் ஒன்றாக” தொடர்ந்தும் தாம் இருக்கப்போவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பிரதமர் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று 51 வயதான ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2015 இல் ட்ரூடோ பிரதமரான பின்னர் அவரும் மனைவியும் பல நிகழ்வுகளில் காணப்பட்டனர். எனினும் சமீபகாலமாக இருவரையும் ஒன்றாக பொதுநிகழ்வுகளில் காணமுடியவில்லை என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments