Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கனடாவில் உடனடி வேலை வாய்ப்பு! சிந்தித்து செயல் படுவோம்.


 கனடாவில் போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இவ்வாறு போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Fake Employment Fraud On The Rise In Canada

சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி மேற்கொள்ளப்படுவதோடு நட்புறவாக பழகி அதன் மூலமாக பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை 32000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டு மோசடிகள் மூலம் 531 மில்லியன் டொலர்களை மக்கள் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments