Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு...!



இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் , சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments