நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலை வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இலக்கை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதாகவும், ஆனால் குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்காததால் நடத்துனர், அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.
இருந்த போதும் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆறு பிள்ளைகளின் தாய்
ஆடி அம்பலம் வல்பொல பகுதியைச் சேர்ந்த ராமகாந்தி என்ற 52 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனை
பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், மஹரகம பிரதேசத்திற்கு பொறுப்பான மரண விசாரணை அதிகாரி சடலத்தை பரிசோதித்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்து, சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்துள்ளார்.
அதற்கமைய, குறித்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments