மருதமுனை பைத்துல் ஹெல்ப் தொண்டு நிறுவனத்தால் வருடா வருடம் மத்ரஸா மாணவர்களுக்கான அல்-குர்ஆன் பிரதி வழங்கும் நிகழ்வு இம்முறையும் அதன் தலைவர் எம்.எச்.றைசுல் ஹக்கீம் அவர்களின் தலைமையில் மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் 09.09.2023 நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஐ.லியாக்கத் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்தார். அத்துடன் மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்மாப் பள்ளி வாசல் நிருவாக சபை உறுப்பினர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்கக்கு பிரதிகளை வழங்கி வைத்தனர்.
இன் நிகழ்வுக்கான அனுசரணையினை ஜோர்டான் நாட்டின் ஸம் ஸம் தொண்டு நிறுவனம் வழங்கியமை சிறப்பம்சமாகும். இன்நிகழ்வில் 100 மாணவர்களுக்கான அல்-குர்ஆன் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments