Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

துபாயில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்துகளில் 5 பேர் பலி.. 29 பேர் காயம்.. புள்ளி விபரங்களை வெளியிட்ட காவல்துறை..!!


துபாயில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயண்பாடு குடியிருப்பாளர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்துகளில் சிக்கி 29 பேர் காயமடைந்துள்ளதாகவும், 5 பேர் பரிதாபமாக உயிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சாலைகளில் இ- ஸ்கூட்டர்களை முறையாகப் பயன்படுத்தாததால் 32 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே காலகட்டத்தில், வாகன ஓட்டிகள் மீது 10,000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமிரேட்டில் தங்கள் உயிருக்கோ மற்ற சாலைப் பயனர்களின் உயிருக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 300 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

துபாய் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இ-ஸ்கூட்டரை ஓட்டுவது, போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிர்திசையில் ரைடு செல்வது மற்றும் முக்கிய சாலைகளில் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களையும் காண முடிகிறது.

ஆகவே, இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து சட்டங்களையும் பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

  • எப்போதும் நியமிக்கப்பட்ட பாதைகளிலேயே ரைடு செய்ய வேண்டும்.
  • 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்
  • சாலைகளைத் தவிர்க்கவும்.
  • ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகளை அணிதல்.
  • போக்குவரத்து சிக்னல் மற்றும் சாலை அடையாளங்களை கடைபிடிப்பது.
  • பிரகாசமான வெள்ளை மற்றும் பிரதிபலிப்பு விளக்குகளை முன்பக்கத்திலும், சிவப்பு மற்றும் பிரதிபலிப்பு விளக்குகள் பின்பக்கத்திலும் இருக்க வேண்டும்.
  • செயல்படக்கூடிய பிரேக்குகள் வாகனத்தில் இருப்பது அவசியம்.
நன்றி...

Post a Comment

0 Comments