மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியை இஸ்ரோ இன்று(21) மேற்கொள்ள உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் ஆளில்லா கலன் விண்ணில் செலுத்தப்பட்டு, பாதுகாப்பாக கடலில் இறக்கப்பட உள்ளது.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
0 Comments