Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கொழும்பில் கோர விபத்து பாடசாலை மாணவர்கள் ஐவர் பரிதாபமாக பலி.

 கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் காயமடைந்த நிலையில் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

20 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 15 பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த நான்கு பயணிகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Post a Comment

0 Comments