உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிர மாநில அரசிடம் ஷாருக்கான் கடந்த 5-ம் திகதி எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார்.
அந்த புகாரிமுறைப்பாட்டின் பேரில், ஷாருக்கானின் பாதுகாப்பை வய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்துமாறு மகாராஷ்டிர உளவுப் பிரிவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் பயணம் செய்யும் போது அவரைப் பாதுகாக்க 6 கமாண்டோக்கள், 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பொலிஸ் வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments