Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மதீனா- இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அஷ்ஷைக் முஹம்மது ஷாபி முஹம்மது ஸர்ஹான் இன்ஆமீ- மதனீ தப்ஸீர் மற்றும் அல்குர்ஆன் கற்கைகள் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.


அஷ்ஷைக் முஹம்மது ஷாபி முஹம்மது ஸர்ஹான் இன்ஆமீ- மதனீ தப்ஸீர் மற்றும் அல்குர்ஆன் கற்கைகள் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள மதீனா- இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இன்று அஷ்ஷைக் ஸர்ஹான் அவர்கள் 14/11/2023 செவ்வாய்க்கிழமை மெய்நிகர் வழியில் வாய்மொழி மூலமாக தனது

استنباطات السيوطي في الإكليل من الآية: (15) من سورة النساء وحتى الآية: (101) منها -دراسة استقرائية نقدية-

எனும் கலாநிதி ஆய்வை சமர்ப்பித்து, மூவர் கொண்ட பரீட்சைக் குழுவால் சிறப்பாக பரிசீலனை செய்யப்பட்டு முதல் தர அதி சிறந்த பெறுபேறு வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவரகளால் கௌரவித்து மெச்சப்பட்டதையடுத்து கலாநிதி பட்டத்தை நிறைவுசெய்து இதுவரை கால மதீனத்து இலங்கை மாணவர்களுள் இரண்டாம் கலாநிதி எனும் வரலாற்றிடத்தை தனதாக்கிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

இவர் இலங்கை, குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மானை- தம்பதெனிய நகரை பிறப்பிடமாகக் கொண்டதோடு சேஹ் நூர்தீன் முஹம்மது ஷாபி, அப்துல் காதர் உம்மு பரீதா தம்பதியினரின் அன்பு புதல்வுமாவார். தனது ஆரம்ப பாடசாலைக் கல்வியை மும்மான முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்ற இவர் பின்னர் புனித அல்குர்ஆனை திறம்பட மனனமிட்டு சிறந்த ஹாபிழாக திகழ வேண்டும் எனும் நோக்கில் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அமைந்துள்ள மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியில் சேர்ந்து தனது உயரிய நோக்கத்தை அடைந்து ஹாபிழாக பட்டம் பெற்று வெளியேறினார்.

தொடர்ந்து மார்க்கக் கல்வியை முறையாக கற்கும் பொருட்டு, கல்வியில் பல உயர் அடைவுகளை அடைந்து சிறந்து விளங்கும் கண்டி-புர்கானிய்யா மத்ரஸாவில் இணைந்து ஆலிம் கற்கைநெறியைத் தொடர்ந்து பின்னர் அட்டுளுகமவிலுள்ள ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அரபுக் கல்லூரியில் சேர்ந்து கற்று குறித்த கற்கைநெறியை நிறைவு செய்து விஷேட சித்தியுடன் ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார்.

அத்தோடு தான் கற்ற கல்வியை கற்பிக்கும் பேரவாவுடன் அரக்கியாலையிலுள்ள ரௌழதுல் ஹாபிழீன் மற்றும் கனுகட்டியவிலுள்ள ஸைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அரபுக் கலாசாலைகளில் சுமார் மூன்று வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார்.

பின்னர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அங்கு ஹதீஸ் மற்றும் உயர் இஸ்லாமிய கற்கைகள் எனும் பீடத்தில் கற்பதற்குத் தகுதியும் பெற்றெதோடு சிறப்பாகக் தனது கற்கையை முன்னெடுத்து 2008ம் ஆண்டு தனது இளமாணி பட்டப்படிப்பை முதல் தர விஷேட சித்தியுடன் நிறைவு செய்தார்.

இளமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த ஷைக் ஸர்ஹான் இன்ஆமீ- மதனீ அவர்களது கல்வித் தாகம் மேற்படிப்பை நோக்கி நகர ஆரம்பித்ததையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கிடையில் " அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் துறைக்காக" நடைபெற்ற முதுமாணி தகுதிகாண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து முதுமாணி கற்கைக்குத் தெரிவாகி, 2015ம் ஆண்டு " أحكام القرآن لأبي بكر ابن العربي من أول سورة الأحزاب إلى آخر سورة المجادلة دراسة وتحقيقا-"

எனும் தலைப்பில் தனது ஆய்வை சமர்ப்பித்து சிறந்த பெறுபேறுடன் முதுமாணி பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக மட்டத்தில் கலாநிதி பட்டப்படிப்புக்காக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தெரிவாகி தனக்கு ஏற்பட்ட பல தடங்கள், அறுவை சிகிச்சைகளைத் தாண்டி மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் தொடர் விடா முயற்சியை மேற்கொண்டு திறமையான ஒழுங்கமைக்கப்பட்ட கலாநிதி ஆய்வை சமர்ப்பித்து இன்று வாய்மொழி மூல பரீட்சையையடுத்து கலாநிதியாக தகுதி பெற்றுள்ளார்.

இவர் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் போற்றுமளவு அனைவருடனும் பண்பாக பழகும் வண்ணம் அழகிய குணங்களை தன்னகத்தே கொண்ட பல திறமைகளுள்ள ஒரு சிறந்த ஆளுமை மட்டுமல்லாது மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலுள்ள இலங்கை மாணவர் ஒன்றியத்தின் மஷூரா சபை, இணக்கப்பாட்டு சபை ஆகியவற்றின் ஆலோசகராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது நிதானம், சமயோசிதம், புன்முறுவலோடு ஏனையோரை அணுகும் முறை, விவேகம் என்பவற்றை சூழவுள்ளோர் வியந்து பார்க்குமளவு தனித்துவமாக காணப்படுபவர் என்றால் ஒருபோதும் மிகையாகாது.

இவரது இவ்வளர்ச்சிக்கும் அடைவுக்கும் வழி வகுத்த அல்லாஹ்வை போற்றிப் புகழ்வதுடன், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், அதிபர், ஆசியர்கள் (உஸ்தாத்மார்கள்), மத்ரஸா உட்பட நண்பர்கள்,மனைவி, குடும்பத்தார், உறவுகளையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்ததாகும்.

இலங்கைக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்த்து தன்னை இறைக் கல்விக்காக அர்ப்பணித்துள்ள கலாநிதி அஷ்ஷைக் முஹம்மது ஷாபி முஹம்மது ஸர்ஹான் இன்ஆமீ- மதனீ அவர்களை போற்றிப் புகழ்வதுடன் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இதே வேளை வல்லவன் அல்லாஹ்விடம் இவரது கல்விப் பாதை மென்மேலும் சிறக்கவும், இவரது அறிவின் மூலம் ஏனைய மக்களும் பயனடைய வழி வகுக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.


الحمد لله الذي بنعمته تتم الصالحات أولا وآخرا

تهانينا الحارة لكم على إكمال دراستكم العليا وحصولكم على الدكتوراه! إنجاز رائع يعكس تفانيكم وجهودكم الكبيرة.

و نفتخر بإنجازاتكم العلمية ونتمنى لكم مستقبلًا مشرقًا ومليئًا بالنجاح والتألق.

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா
15/11/2023

Post a Comment

0 Comments