சென்னை விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கியதையடுத்து இன்று இரவு 11 மணிவரை விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி, சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளதையடுத்து பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இதேவேளை, மோசமான வானிலையின் காரணமாக இன்று நள்ளிரவு 11 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளன
0 Comments