Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் : சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் : சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Law For International Srudents In Canada

சர்வதேச மாணவர்கள் கனடாவில் பொருளாதார சிக்கலை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட வேலை நேரம்

அடுத்தபடியாக சர்வதே மாணவர்கள் வேலை செய்யும் நேரத்திலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றுக்கு 20 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments