சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பாக JN.1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன.
“ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்” என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) தெரிவித்துள்ளது.
0 Comments