புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது
தெரிவுக்குழுவின் தலைவராக ஹேமந்த தேவப்பிரியவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பெண்களுக்கான கிரிக்கெட் தெரிவுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ள ஐந்து பேர் கொண்ட குழுவில் தேவப்பிரியாவுக்கு மேலதிகமாக இலங்கையின் முன்னாள் வீராங்கனைகளான ரசாஞ்சலி அல்விஸ், ஸ்ரீபாலி வீரக்கொடி, நில்மினி குணரத்ன மற்றும் ஜெயமாலி இந்திகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் அணியை தெரிவு செய்வது இந்த புதிய தெரிவுக்குழுவின் முதல் பொறுப்பாகும்.
0 Comments