இந்தியாவின் யூனியன் பிராந்தியமான லட்சத்தீவில் உவர் நீர் சுத்திகரிப்பு திட்டத்தை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இப்பணியை முன்னெடுக்க இருப்பதாக இந்தியாவிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலிய தூரகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, லட்சத்தீவில் உவர் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேலிய நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வருடம் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் இத்திட்டத்தை ஆரம்பிக்க நாம் தயாராகியுள்ளோம்’ என்றுள்ளது.
அத்தோடு லட்சத்தீவின் படங்களையும் இஸ்ரேலிய தூதரகம் பகிர்ந்துள்ளது.
இதேவேளை லட்சத்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, லட்சத்தீவில் கடற்கரையோர சுற்றுலாவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments