Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு.!


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சைரன்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சைரன்'. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.கே. செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் முதலில் பெப்ரவரி ஒன்பதாம் திகதியன்று தமிழில் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறாததால்... அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'சைரன்' திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் திரைப்பட வணிகர்களிடம் பேராதரவு இல்லை என்பதும், தற்போது இந்த திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதும்.. சில கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்தத் திரைப்படத்தை பட மாளிகைகளில் வெளியாக திரையுலக வணிகர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments