Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இனி ஸ்டிக்கர்களை உருவாக்க 3-ம் நிலை APP தேவையில்லை! WhatsApp கொண்டு வந்த சூப்பர் அப்டேட்...!

WhatsApp Sticker Maker

WhatsApp பயன்பாட்டாளர்களை மேலும் வசீகரிக்கும் வகையில் புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கவும், எடிட் செய்யவும் வகையிலான அப்டேட்டை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப் ஆனது, கூடுதலாக தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஸ்டிக்கர்களை க்ரியேட் மற்றும் எடிட் செய்யக்கூடிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சத்தின் சிறப்பம்சம் என்ன?

நம்மில் கிட்டத்தட்ட 90% மக்கள், மற்ற செயலிகளை விட தகவல் பரிமாற்ற இயங்குதளமான வாட்ஸ்அப்பை தான், அதிகமாக பயன்படுத்திவருகிறோம். குடும்பங்கள், நண்பர்கள், வேலைபார்க்கும் இடங்கள், ஆன்மீகம் என ஆரம்பித்து, பல உறவுகளின் பாலமாக வாட்ஸ்அப் இருந்துவருகிறது. இந்நிலையில் உறவுகளிடையே இருக்கும் அன்பையும், குறும்புத்தனத்தையும் மெருகூட்டும் வகையில் ஸ்டிக்கர்களை உருவாக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

அதாவது தற்போது வரை இருக்கும் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள், “நண்பர்களை கலாய்க்கவோ, காதலி/காதலன் உடன் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவோ, மீம் கண்டெண்ட்களை எப்போதும் கைவசம் வைத்திருக்கும் விதமாகவோ” புதுப்புது ஸ்டிக்கர்களை 3-ம் நிலை ஆப்கள் மூலம் உருவாக்கி, அதை மற்ற நெருக்கமானவர்களுக்கு அனுப்பி ஃபன் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மூன்றாம் நிலை ஆப்களின் உதவியில்லாமல் வாட்ஸ் அப்பிலேயே புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கும் விதமாக புதிய அப்டேட்டை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களின் சின்ன சின்ன குறும்புத்தனமான மகிழ்ச்சிகளுக்கு கூட மெட்டா கவனம் செலுத்திவருகிறது.

* டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் இடத்தை டச் செய்வதன் மூலம் கீபோர்ட் ஓபானாகும். அப்போது லெஃப் சைட் கார்னரில் இரண்டாவதாக இருக்கும் ஸ்டிக்கர் ஐகானை ஓபன்செய்வதன் மூலம் ஸ்டிக்கர் டிரேவிற்கு நீங்கள் செல்வீர்கள்.

* பின்னர் அதில் “ஸ்டிக்கரை உருவாக்கு” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கேலரியில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* பின்னர் கட்அவுட் என்பதை தேர்ந்தெடுத்து டெக்ஸ்ட், பிற ஸ்டிக்கர்கள் அல்லது வரைபடங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு தகுந்தாற் போல் புதிய ஸ்டிக்கரை நீங்கள் உருவாக்கி கொள்ளலாம்.

* ஷேர் அல்லது செண்ட் ஆப்சன் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.


ஏற்கனவே உள்ள ஸ்டிக்கர்களை எப்படி எடிட் செய்வது?

*ஸ்டிக்கர் ஐகானைத் தட்டுவதன் மூலம் உங்கள் ஸ்டிக்கர் ட்ரே திறக்கப்படும்.

*அதில் நீங்கள் திருத்த விரும்பும் ஸ்டிக்கரை நீண்ட நேரம் அழுத்தி, ”ஸ்டிக்கரைத் திருத்து” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

*அதில் நீங்கள் விரும்பக்கூடிய டெக்ஸ்ட், பிற ஸ்டிக்கர்கள் அல்லது வரைபடங்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய ஸ்டிக்கரை எடிட் செய்துகொள்ளலாம்.

*திருத்தப்பட்ட ஸ்டிக்கரை அனுப்புவதன் மூலம் ஷேர் செய்துகொள்ளலாம்.

WhatsApp Sticker Maker

குறிப்பிடத்தக்கவகையில் இந்த அம்சமானது ஐபோன் 17+ பயன்பாட்டாளர்களுக்கும், WhatsApp Web-ல் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. எப்போது அனைத்து ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கும், ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கும் அறிமுகமாகும் என்ற தகவலை இன்னும் வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் ஐபோன் பயன்பாட்டாளர்களால் ஸ்டிக்கரை திருத்தலாம் ஆனால் உருவாக்க முடியாது. மேலும் ஸ்டிக்கர் அப்டேட்டை சுவாரசியமாக்கும் வகையில், விரைவில் AI ஸ்டிக்கர் ஜெனரேட்டர் அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments