செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
துறைமுகத்தின் கொள்கலன் நடவடிக்கைகளும் 72 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயபஹலு முனையத்தின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், செங்கடல் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
0 Comments