Trending

6/recent/ticker-posts

Live Radio

மின்சார கட்டணம் தொடர்பான அறிக்கை சமர்பிப்பு...!


- சோலார் பேனல்கள் மீதான வெட் வரியை நீக்க நடவடிக்கை -

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை நேற்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளதுடன், குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், “நீர் மின் உற்பத்தி அதிகரிப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு விசேடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது தவிர, சோலார் பேனல்கள் மீதான வெட் வரியை நீக்குதல், உற்பத்தித் தொழில்களுக்கு சலுகைகள், மின் கட்டணம் செலுத்துவதற்கான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகம் போன்ற திட்டங்களும் அதில் அடங்கியுள்ளன.

Post a Comment

0 Comments