கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெரா கட்டமைப்பு செயற்பாடுகள் இன்று (22) முதல் அமுலுக்கு வருகின்றன.
கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமெராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, குற்றவாளிகளாகக் கண்டறியப்படுபவர்கள் செலுத்த வேண்டிய அபராதப்பத்திரம் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும்.
இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறியும் பொலிஸாரின் சிசிரிவி திட்டத்துக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன, இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments