Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நிலவில் Slim விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஜப்பான்...!


ஜப்பான் தனது Slim (Smart Lander for Investigating Moon) விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

இதன் மூலம் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக Slim விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான்.

நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்த​ைகொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Slim விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது.

Post a Comment

0 Comments