Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

181 பேருடன் ஒரேவீட்டில் வாழும் உலகின் மிகப்பெரிய குடும்பம் :எங்குள்ளார்கள் தெரியுமா..!



39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 181 பேருடன் உலகின் மிகப்பெரிய குடும்பமொன்று இந்தியாவில் வாழ்ந்து வருவதான ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இந்த பெரிய குடும்பம் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறது.
ஒரே ஆண்டில் 10 திருமணம்

இம்மாநிலத்தின் பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்த ஜியோனா சனா, தனது 17வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில், அவருக்கு மொத்தம் 39 மனைவிகளும், அதன்மூலம் அவர்களுக்கு 94 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

மேலும் இந்தக் குழந்தைகளுடைய மனைவிகள் மற்றும் அவர்களுடைய 36 பேரக்குழந்தைகள் என ஒட்டுமொத்தமாக ஜியோனாவின் குடும்பத்தில் 181 பேர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களது பெரிய டைனிங் ஹோலில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் எனவும், அந்த வீட்டில் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறைதான் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஒருநேர உணவிற்காக 100 கிலோ அரிசி

அவர்களின் ஒருதடவை உணவுக்காக 30 கிலோ கோழியும், 60 கிலோ உருளைக் கிழங்கும், 100 கிலோ அரிசியும் சமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



எனினும், தாம் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒரேமாதிரியான அன்பு, நம்பிக்கையையும், அனைவரிடமும் ஒற்றுமையை கடைப்பிடித்து வந்துள்ளார், ஜியோனா.

அவர்களது பெரிய டைனிங் ஹோலில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் எனவும், அந்த வீட்டில் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறைதான் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தாம் தொடர்ந்து திருமணம் செய்துகொள்வது குறித்து குடும்பத்தில் எந்தச் சண்டையும் ஏற்படவில்லை’ என்று தமது பேட்டிகளில் அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தை வழிநடத்திய ஜியோனா, அதற்கேற்ற இடவசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இவர்களுடைய குடும்பம் வசிப்பதற்காக மட்டும் 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு இருக்கிறது. அதில் மொத்தம் 100 அறைகள் உள்ளன. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டைப் பார்த்தால் ஏதோ அடுக்குமாடி குடியிருப்பு போன்றும், அங்கு 10, 15 குடும்பங்கள் வசிப்பதுபோலவும் தோற்றமளிக்கும்.



இப்படி, உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் ஜியோனா, கடந்த 2021ஆம் ஆண்டு, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக, சிகிச்சை பலனின்றி மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ட்ரினிட்டி மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 76.

Post a Comment

0 Comments