Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பாண் எடை குறைத்து விற்பனை செய்த 450 பேக்கரிகள் மீது வழக்கு...!


ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி விதிமுறைகளின்படி விலையை குறிப்பிடாத 453 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு வழக்கு தொடர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 453 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும், நுகர்வோருக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments