Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை...!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments