Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நவீன யுகத்திற்கு அமைவாக இந்திய சட்டங்களில் சீர்திருத்தம்...!



நவீன யுகத்திற்கு ஏற்ப தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் சட்ட மாஅதிபர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மாநாட்டை புதுடில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற தொனிப்பொருளிலான இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள ஆயிரக்கணக்கான சட்டங்களை நாம் நீக்கியுள்ளோம். காலனித்துவ காலம் முதல் இந்தியா ஒரு சட்ட அமைப்பைப் பெற்றுள்ள போதிலும் அதில் பல சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த சில சமயங்களில் ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படும் போது, அமைப்புக்களை ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பிராந்திய நாடுகளின் சட்ட மாஅதிபர்களும் சட்டத்தரணிகளும் பங்குபற்றிய இம்மாநாட்டில் சட்டக்கல்வி, சட்டம், நீதி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments