Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பாணின் எடை குறித்த வர்த்தமானி அறிவிப்பு...!



ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரை இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாணின் எடை தௌிவாக காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments