Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



காசா இனப்படுகொலையின் உச்சம்; பலஸ்தீன பிரதமர் இராஜினாமா...!


- போரின் பின் அரசியல் கட்டமைப்பொன்றில் பணியாற்ற அமெரிக்காவின் அழுத்தமும் காரணம் -

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பலஸ்தீன பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார்.

தமது அதிகாரத்திற்குட்பட்ட காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பிரதேசத்தில் அதிகரித்துவரும் போர் மற்றும் வன்முறைக்கு மத்தியில் தமது அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்றையதினம் பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்குக் கரை மற்றும் ஜெருசலம் ஆகிய பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் வன்முறைகள் மற்றும் போர், இனப்படுகொலை, காசா பகுதியில் ஏற்பட்டுள்ள பட்டினி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இந்த இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரைத் தொடர்ந்து ஒரு பலஸ்தீனிய அரசை ஆளக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பிற்கான வேலையைத் தொடங்குமாறு, மஹ்மூத் அப்பாஸ் மீது அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பலஸ்தீன பிரதமர் மொஹமட் ஷ்டய்யே தனது இராஜினாமா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், பலஸ்தீன அரசை ஆளும் மஹ்மூத் அப்பாஸின் கீழ் கொண்டு வருவதற்கும் காசாவை ஆளுவதற்கும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பல சந்தர்ப்பங்களில் நிராகரித்துள்ளார்.

கடந்த வாரம், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பலஸ்தீனை தன்னிச்சையான ஒரு அரசாக அங்கீகரிபதை நிராகரிக்கும் நெதன்யாகுவின் யோசனைக்கு ஆதரவு வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைதி ஏற்படுத்துவதை தடுக்கின்ற மற்றும் இஸ்ரேல் அரசுக்கு ஆபத்தை விளைவிக்கின்ற, எம் மீது அழுத்தத்தை கொண்டு வரும் பலஸ்தீன அரசை நிறுவும் முயற்சிக்கு எதிராக இஸ்ரேல் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் ஒன்றிணைந்ததாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்த வாக்கெடுப்பை கடுமையாக சாடிய பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு, பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமித்ததன் காரணமாக பலஸ்தீனியர்களின் உரிமைகளை இஸ்ரேல் பறித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தின் முழு அங்கத்துவம் மற்றும் ஏனைய நாடுகளால் அங்கீகரிப்பிற்கு முன்னால், நெதன்யாகுவின் அனுமதி தேவையில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments