Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்திய- தாய்லாந்து நட்புறவில் மைற்கல் தருணம்...!


புத்த பெருமானின் புனித நினைவுச் சின்னங்களை தாய்லாந்தில் காட்சிப்படுத்தவது இந்திய- தாய்லாந்து நட்புறவில் ஒரு மைற்கல் தருணம் என்று தாய்லாந்துக்கான இந்தியத் தூதுவர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் பழமையானது. பொருளாதாரம், வர்த்தகம், சமூக, கலாசாரம் என பல மட்டங்களுக்கும் விரிடைவடைந்துள்ள இந்த உறவு ஆழமாக வேரூன்றியுள்ளன. குறிப்பாக எமக்கிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றன. 2022 இல் மாத்திரம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அத்தோடு தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பும் அது தொடர்பான ஒத்துழைப்புக்களும் சிறப்பாக உள்ளன. தாய்லாந்து மக்கள் இந்தி கற்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். எமது சினிமாவையும் விரும்பக்கூடியவர்களாக உள்ளனர்’ என்றுள்ளார்.

90 வீதம் பௌத்த மக்கள் வாழும் தாய்லாந்தில் புத்த பெருமானின் புனித நினைவுச் சின்னங்களை 26 நாட்கள் காட்சிப்படுத்துவதற்காக பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சமூக நீதி மற்றும் வலுவூட்டல் துறை மத்திய அமைச்சர் கலாநிதி வீரேந்திர குமார் ஆகியோர் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவொன்று சென்றுள்ளது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் எடுத்து செல்லப்பட்ட இப்புனித சின்னங்கள் பேங்கொக் உட்பட தாய்லாந்தின் பல நகரங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தாய்லாந்து மக்கள் மாத்திரமல்லாமல் கம்போடியா, லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்தும் யாத்திரிகர்கள் வருகை தந்து இச்சின்னங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக இந்திய மத்திய கலாசார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments