காஸாவில் “உடனடியாக போர் நிறுத்தம்” அறிவிக்கப்பட வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை விமர்சிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதிக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் மக்கள் படும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் அடுத்த ஆறு வாரங்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இஸ்ரேல் மீது முன்வைத்துள்ள கடுமையான விமர்சனம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய எல்லைக் கடவைகளைத் திறந்து “தேவையற்ற கட்டுப்பாடுகளை” விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், காஸாவுக்கு உதவிகளை வழங்குவதற்கு இஸ்ரேல் இன்னும் அதிகமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.
இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு மன்னிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
0 Comments