சவுதி அரேபியாவில் தலைப்பிறை தென்பட்டது. எனவே, ரமலான் 1445 இன்றிரவு தொடங்கும்.
இந்நிலையில் சவுதி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் பல ஐரோப்பிய தேசங்களிலும் புனித ரமழான் நோன்பு நானை திங்கட்கிழமை 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
மேலும் கட்டார் நாட்டிலும் நாளை 11/03/2024 திங்கட்கிழமை ரமழான் மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படும் என கட்டார் நாட்டின் AWQAF அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளையில் இலங்கையில் பிறை பார்க்கும் தினமாக நாளை திங்கட்கிழமை 11ஆம் திகதி என்று கொழும்பு பெரியவாசல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வழமைப்போல் இடம்பெறும் என்றும் பிறை சம்பந்தமான தகவல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின் ரமழான் நோன்பு ஆரம்பிப்பதற்கான அறிவித்தலை அம்மாநாட்டு முடிவின் அறிவிக்கப்படவுள்ளது.
அனைவருக்கும் இப்புனித ரமழான் மாதம் வெற்றிகரமாய் அமைய வல்ல இறைவன் அருள் புரிவானாக…🤲
0 Comments