இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 21.9 சதவீதத்தினால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது
அதேபோல், 31 முதல் 60 அலகு வரையான மின் பாவனையாளர்களுக்கு 28 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
மேலும், 60 முதல் 90 அலகு வரையிலான மின் பாவனையாளர்களுக்கு 30 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
அதேபோல், 90 முதல் 180 வரையிலான பாவனையாளர்களுக்கு 24 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ள நிலையில், மத ஸ்தானங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 33 சதவீதத்தாலும், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு 18 சதவீதத்தாலும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின் பாவனைக்கு 23 சதவீதத்தாலும் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments