அப்பிள் நிறுவனம் திறன்பேசிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி அமெரிக்காவின் நீதித் துறையும் 15 மாநிலங்களும் அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளன.
ஐபோன் கைத்தொலைபேசிகளை விற்கும் அப்பிள், திறன்பேசிச் சந்தையில் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக அவை குற்றஞ்சாட்டின. இதனால் சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொலைபேசிகளின் விலை ஏறியுள்ளதாகவும் கூறப்பட்டது.
துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அப்பிள் அதிக லாபம் ஈட்டுவதாக அமெரிக்காவின் நீதித் துறை கூறியது.
நிறுவனம் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் ஏதாவது ஒரு விதத்தில் கட்டணம் வசூலிப்பதாக அது கூறியது. இறுதியில் வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுவதாக நீதித் துறை குறிப்பிட்டது.
அப்பிள் குற்றச்சாட்டுகளை மறுத்தது. அதிகப் போட்டித்தன்மை உள்ள சூழலில் மற்ற நிறுவனங்களிலிருந்து தனித்து நிற்க முனையும் தமது கொள்கைளுக்கு வழக்கு மிரட்டலாய் அமைந்துள்ளதாக அப்பிள் கூறியது.
0 Comments