செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது கிளர்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments