Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையர்கள் உட்கொள்ளும் சீனி குறித்து அதிர்ச்சித் தகவல்...!


இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என வரையறுத்துள்ளது.

எனினும் இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதிகளவு சீனி பாவனையால் இலங்கையில் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments