தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக விமானப் பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐரோப்பாவுக்கான விமான சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தேவைப்படுவதுடன், விமானம் சுமந்து செல்லும் எடையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலண்டன் செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும். இதனால் இலண்டன் செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
நேர மாற்றத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு மாற்று விமானங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக இலங்கை விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments