17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாடும் தகுதியை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்றுக்கொண்டது
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.
0 Comments